ஆன்லைனில் பறிபோகும் பணம்... வங்கிகளே உடந்தையா?

முன்பெல்லாம் திருடர்கள் பதுங்கிப் பதுங்கி பயந்து பயந்து பிக் பாக்கெட் அடிப்பார்கள். அல்லது பிளேடு போடுவார்கள். இப்போது அந்தக் காலமெல்லாம் மலையேறிவிட்டது. இந்த ஸ்மார்ட்  போன் யுகத்துக்கேற்ப தங்களை அப்டேட் செய்துகொண்டு, உங்களுக்குத் தெரிந்தே உங்கள் பணத்தைத் திருடும் அளவுக்கு பலே டெக்னாலஜி திருடர்கள் அதிகரித்துவிட்டார்கள். 

கணேஷ்குமார் தனது அலுவலகத்தில் பிசியாக வேலைப் பார்த்துக்கொண்டிருந்த சமயம் பார்த்து அவருக்கு ஒரு போன் வந்தது. அதற்கு சில நாட்களுக்கு முன்புதான் கணேஷ்குமார் தனது டெபிட் கார்டுக்கான காலம் முடியவிருப்பதாகவும், எனவே  புதிய கார்டினைத் தரவேண்டும் என்றும் அவர் கணக்கு வைத்திருக்கும் பொதுத் துறை வங்கியிடம் விண்ணப்பம் செய்திருந்தார். 

போனில் பேசியவர், அவர் கணக்கு வைத்திருக்கும் அந்த பொதுத் துறை வங்கியில் இருந்து பேசுவதாகவும், அவரது டெபிட் கார்டு எக்ஸ்பைரி ஆகவிருப்ப தால், புதிய கார்டு வாங்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் டெபிட் கார்ட் நம்பரையும், ரகசிய பின் நம்பரையும் தந்தால் இப்போது பயன்படுத்தும் கார்டையே புதுப்பித்துக் கொள்ளலாம் என்று கூறி, அத்தனை ‘ரகசிய’ விவரங் களையும் கேட்டு வாங்கிவிட்டார்.  போனில் பேசியவர் வங்கி ஊழி யர் எனவும், பக்காவாக இங்கிலீஷில் பேசியதாலும் அவர் மீது எந்த சந்தேகமும் கணேஷ்குமாருக்கு வரவில்லை. ஆனால், அடுத்த நாள் கணேஷ்குமாரின் கணக்கில் இருந்து ரூ.3,000 காணாமல் போனது. 

வங்கியில் அவர் புது ஏ.டி.எம். கார்டுக்கு விண்ணப்பித்த தகவல் எப்படி வேறு ஒருவருக்குத் தெரிந்தது? அந்த ஆசாமிக்கு வங்கியில் வேலை பார்ப்பவர்களே உதவினார்களா? அல்லது வங்கியில் வேலை பார்ப்பவர்களே தங்கள் வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையோடு விளையாடுகிறார்களா என்பது போன்ற பல கேள்விகள்  எழவே செய்கின்றன. 
Jane Doe

Paul Jacobsen

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt labored et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

Share This Post