பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்: வங்காளதேச பிரதமர் உறுதி

வங்காளதேசத்தில் ஐ.எஸ் அமைப்பினரால் இந்து மத பூசாரி ஒருவர் நேற்று வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், நாடு முழுவதும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
 
வங்காள தேசம் ஜினய்கா மாவட்டத்தை சேர்ந்தவர் ஆனந்த கோபால் கங்குலி (வயது 65). கோவில் பூசாரியான இவர் நேற்று காலையில் தனது வீட்டில் இருந்து கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் ஆனந்த கோபால் கங்குலியை வழிமறித்து அவரது கழுத்தை அறுத்து படுகொலை செய்தனர். பின்னர் அந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 
Jane Doe

Paul Jacobsen

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt labored et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

Share This Post