அன்று அணி... இன்று கிலி... கோட்டையில் பரபரப்பு!

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்த பின்னர், வாக்கு எண்ணிக்கைக்கு இடைப்பட்ட நாட்களில்,  முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் ஆட்சி அமையாது என்று கருதி, திமுக தலைவர்கள் மற்றும் முக்கிய நபர்களை தலைமைச் செயலக அதிகாரிகளில் சிலர் ஒரு அணியாகத் திரண்டு சென்று சந்தித்த விவகாரம் கோட்டை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.

தேர்தலுக்கு முன்பிருந்தே பல்வேறு கருத்துக் கணிப்புகள் தமிழகத்தில் திமுக தலைமையில்தான் ஆட்சி அமைய உள்ளது என்றும், அதிமுக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறாது என்றும் கூறி செய்திகள் வெளிவந்தன. அதே போல உளவுத்துறை அறிக்கையும் ஊடகங்களின் கருத்துக்கணிப்பை ஒட்டியே தயாரிக்கப்பட்டு முதல்வர் ஜெயலலிதா பார்வைக்கு வைக்கப்பட்டது என்றும் தகவல்கள் வெளிவந்தன. இதனால்  தமிழகத்தின் பிரதான அதிகார மையமான தலைமைச் செயலகத்தில், செயலாளர்கள் தொடங்கி அலுவலக உதவியாளர்கள் வரையிலும் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற குழப்பம் நிலவியுள்ளது. 

அப்போது ஒருசில முக்கிய அதிகாரிகள் ஒன்று கூடி,  திமுக ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு நடந்தால்  முதல்வர் பதவியேற்பு நிகழ்வை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தலாம் என்றும், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கு யார் யார் அமர்த்தப்படவேண்டும் என்றும்   ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் சீரியஸான ஆலோசனைகள் பலகட்டமாக நடந்துள்ளன. இதில் மாசுக்கட்டுப்பட்டுத் துறை ஐ.ஏ.எஸ். அதிகாரியும், சுகாதாரத்துறை அதிகாரியும் பிரதான பங்கினை வகித்துள்ளனர். இவர்களோடு முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரியும் அடக்கம் என்று தலைமைச் செயலக வட்டார தகவல்கள் தெரிவித்தன. 
Jane Doe

Paul Jacobsen

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt labored et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

Share This Post