கூட்டணியில் சேருவதற்காக எனக்கு யாரெல்லாம் பண ஆசை காட்டினார்கள் தெரியுமா? – விஜயகாந்த்!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், இணையத் தளம் ஒன்று அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி சேருவதற்காக எனக்கு பணஆசை காட்டினார்கள். அ.தி.மு.க., தி.மு.க., பாரதீய ஜனதா கட்சிகள் சார்பில் எனக்கு பணம் தருவதாக பேரம் பேசப்பட்டது. ஆனால் நான் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பணத்துக்கு மயங்காமல் நான் மக்கள் நலக்கூட்டணியுடன் சேர்ந்தேன்.

பாரதீய ஜனதா கட்சித் தலைவர்கள் எனக்கு முதல்-மந்திரி பதவியை தருவதாக கூறி னார்கள். என்றாலும் நான் மக்கள் நலக் கூட்டணியையே தேர்வு செய்தேன். அதில் நான் உறுதியாகவும் இருந் தேன். மக்கள் நலக்கூட்டணியில் நான் எந்த எதிர்பார்ப்பும் வைத்திருக்கவில்லை. ஒரு வேளை அவர்கள் என்னை முதல்-அமைச்சர் வேட் பாளராக அறிவிக்காமல் இருந்திருந்தாலும் கூட நான் அந்த அணியில்தான் சேர்ந்து இருப்பேன்.
 
அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் இந்த நாட்டை பாழ்படுத்தி விட்டார்கள். அப்படிப்பட்ட அ.தி. மு.க., தி.மு.க.வுடனா நான் கூட்டணி சேர வேண் டும்? ஒரு போதும் நான் அவர் களுடன் போக மாட்டேன். 2011-ம் ஆண்டு தேர்தலில் கூட அவர்களில் ஒருவருடன் கூட்டணி வைத்து விட்டு, மூன்றே மாதங்களில் நான் கூட்டணியில் இருந்து வெளி யில் வந்து விட்டேன்.

இந்த தடவை தொங்கு சட்டசபை ஏற்படலாம் என்று சிலர் சொல்வதை ஏற்க இயலாது. மக்கள் 16-ந் தேதி தங்கள் தீர்ப்பை வழங்க உள்ளனர். எனவே 19-ந்தேதி வரை நாம் பொறுத்து இருக்கலாம். சட்டசபையில் ஜெயலலிதா அல்லது கருணாநிதி மட்டும்தான் இருக்க வேண்டுமா? தேர்தலுக்குப் பிறகு தி.மு.க. அல்லது அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை.

மக்கள் இனியும் தி.மு.க. வுக்கு அ.தி.மு.க.வுக்கும் வாக்களித்தால் அது மண் குதிரையை நம்பி ஆற் றில் குதித்த கதையாகி விடும். அ.தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றும் அரசு. அவர்கள் மீண்டும் வெற்றி பெற்று மக்களை சுரண்டவே விரும்பு கிறார்கள்.இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.
Jane Doe

Paul Jacobsen

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt labored et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

Share This Post