காதலரைக் கலட்டிவிடுவது எப்படி? வாங்க சொல்லித்தருகிறோம்..!!!

காதலைச் சேர்த்துவைக்க ஏகப்பட்ட இணையதளங்கள், மொபைல் அப்ளிகேஷன்கள், சமூக வலைதளப் பக்கங்கள்னு பரந்து விரிஞ்சு கிடக்கிற இந்த உலகத்துல, காதலைப் பிரிச்சு வைக்கிறதுக்கும் சில இணையதளங்கள் இருக்கு. வாங்களேன், ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடுவோம்!

‘பிரேக்-அப் ஷாப்’ என்று ஓர் இணையதளம். ‘எனக்கு அவளைப் பிடிக்கலை. அதை டீசன்டா சொல்லி விலகிடணும்டா!’னு சொல்ற பசங்களுக்கும் சரி, ‘அவன்கிட்ட இருந்து விலகிடணும்டி’னு நிற்கிற பொண்ணுங்களுக்கும் சரி… ஒரே ஃபார்முலாதான். இணையதளத்தில் அவங்க கேட்கிற தொகையைக் கொடுத்திட்டா, சம்பந்தப்பட்டவங்களோட இ-மெயிலுக்கு ஒரு லெட்டர் அனுப்பிடுவாங்க. ‘மானே தேனே’னு கவிதை வாசிக்காம, இவங்க அனுப்புற லெட்டர் ‘நீ நல்லவ. நாம நண்பர்களா இருப்போம். இதுதான் என் முடிவு’ என கட் அண்ட் ரைட்டாக இருக்குமாம். லெட்டருக்கு மசியாம, ‘நீ இல்லைனா என்னால வாழவே முடியாது!’னு காதலனோ, காதலியோ கண்ணீர்விட்டுக் கதற ஆரம்பிச்சா என்ன பண்றது? அதுக்கு இன்னும் கொஞ்சம் அதிகமான தொகை செலவாகும். இ-மெயில் ரூட் வொர்க் அவுட் ஆகலைனா, ‘பிரேக்-அப் ஷாப்’ இணையதளம் சார்பாக ‘காதலைப் பிரிக்கும் நிபுணர்’ ஒருவர் காதலனிடமோ அல்லது காதலியிடமோ பக்குவமாகப் பேசிப் புரியவைப்பாராம். ‘நீ யாருடா?’ எனக் காட்டுக் கத்து கத்தினாலும், காதலன்/காதலியின் அத்தனைக் கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் சொல்லிவிட்டு பிரிவுக்கு ஏற்பாடு செய்வாராம் அந்த நிபுணர். தவிர, காதல் பிரியும்போதும் பரிசுப் பொருட்கள் கொடுங்கனு சொல்ற இந்த இணையதளம், இதற்காகவே ‘பிரேக்-அப்’ கிஃப்டுகள், அட்டைகள், பொக்கே என ‘கல்லா’ கட்டும் அத்தனை வசதிகளையும் வைத்திருக்கிறது.
 
‘காதல் ஜோடியைப் பிரிச்சுவிடுறது பாவம். ஆனா, ஒரு காதல் ஜோடியைப் பிரிச்சுவிட்டா, இன்னொரு காதல் ஜோடியைச் சேர்த்து வெச்சுட்டா, நோ பிராப்ளம்’ – இதுதான் ‘ஐ பிரேக்-அப்.நெட்’ இணையதளத்தின் ஐடியா. அதாவது, காதலைப் பிரிச்சுவிடவும் அணுகலாம். சேர்த்துவைக்கவும் அணுகலாம். மொத்த ஆபரேஷனுக்கும் மூணே மூணு பிளான்தான். ‘சேரணுமா, பிரியணுமா?’ கேள்விக்குப் பதில் சொல்லிட்டு, சம்பந்தப்பட்டவரோட இ-மெயில் முகவரியைக் கொடுத்துட்டா போதும். காதலன்/காதலிகிட்ட சொல்ல வேண்டிய விஷயங்களைச் சுருக்கமான வெர்ஷனாக இணையதளத்திலேயே ரெடியாக வைத்திருக்கிறார்கள். அதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து தட்டிவிட்டால், ‘ஸ்வீட் எடுத்துக் கொண்டாடலாம்!’ என்பதுதான் இந்த இணையதளத்தின் சாரம்சம். இந்த ‘சேவை’க்கான கட்டணம் எதுவும் கிடையாது என்பதால், லெட்டர் அனுப்பிவிட்ட பிறகு வரும் எதிர்வினைகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல என்பது கறாரான நிபந்தனை.

‘பிரேக்-அப் டெக்ஸ்ட்’ என்ற ஐ-போன் அப்ளிகேஷனும் காதலைப் பிரிக்கவே. அப்ளிகேஷனைப் பதிவிறக்கம் செய்து, கழட்டிவிட வேண்டியவர் ஆணா, பெண்ணா? என்பதைத் தேர்வு செய்துகொள்ள வேண்டியது. ஜில்,ஜங்,ஜக் மாதிரி ‘நமக்கு இது செட் ஆகாது. பிரிஞ்சுடலாம்!’ என்பதைச் சொல்ல ‘ஜாலியாக, மென்மையாக, வன்மையாக’ என மூணு ஆப்ஷன்கள் இருக்கின்றன. மூன்றில் ஒன்றைத் தேர்வுசெய்த அடுத்த விநாடியே அப்ளிகேஷனில் இருந்து கட்டுரை சைஸில் ஒரு மெசேஜ் வரும். அதை நாம் நிராகரிக்க விரும்புபவர்களின் மொபைல் எண், இ-மெயில், ஃபேஸ்புக், ட்விட்டர்… எனப் பல வழிகளில் அனுப்பிக்கொள்ளலாமாம்!

இது தவிர, கட்டுரைகளாகப் படிக்க வைத்து காதலைப் பிரிக்க ஒரு இணையதளம், காதலியுடன் சண்டை போடுவது எப்படி? என்பதைக் கற்றுக்கொடுக்க ஒரு இணையதளம் என காதலைப் பிரிக்க ‘வலை’ விரித்துக் காத்துக்கிடக்கிறார்கள். எல்லாம் சரி… நான் எதுக்குய்யா நடுராத்திரி சுடுகாட்டுக்குப் போகணும்னுதானே யோசிக்கிறீங்க? நானும் அதையேதான் யோசிக்கிறேன்!

– கே.ஜி.மணிகண்டன், Vikatan
Jane Doe

Paul Jacobsen

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt labored et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

Share This Post