ஈரானில் பர்தா அணியாத பெண்ணின் போட்டோவால் எம்.பி. பதவி பறிப்பு

ஈரானை சேர்ந்த பெண் எம்.பி. மினோ கலேகி. கடந்த பிப்ரவரி மாதம் இஷ்பகான் தொகுதிக்கு நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இருந்தார்.

இந்த நிலையில் அவர் தலையை மறைக்கும் துணி (கெட்ஸ்கார்ப்) அணியாத போட்டோக்கள் இணையதளங்களில் பரவியது. அவர் ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனா சென்றிருந்த போது எடுக்கப்பட்ட போட்டோக்களாகும்.

வெளியிடங்களுக்கு செல்லும் ஈரான் பெண்கள் தலையை மறைக்கும் துணி அணிவது கட்டாயமாகும். அவ்வாறு அணியாதது பெரும் குற்றமாக கருதப்படுகிறது. எனவே, இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது அவர் கூறும்போது, ‘இந்த போட்டோக்கள் போலியானவை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்’ என தெரிவித்தார். இதுபற்றி நீதித்துறை அமைப்பு விசாரணை நடத்தியது.

அதில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பு வழங்கியது. எனவே மினோ கலேகியின் எம்.பி. பதவி ஏற்க முடியாது என அறிவித்தது. அவரது பதவி பறிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Jane Doe

Paul Jacobsen

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt labored et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

Share This Post