லிப்ட்டில் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரின் நாக்கை கடித்து துண்டாக்கிய இளம் பெண்

தெற்கு பிரான்சில் உள்ள துலூஸ் நகரின் புர்பான் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார்.

நேற்று முந்தினம் வெளியே சென்றுருந்த அந்த இளம்பெண் மாலை நேரம் தனது வீட்டிற்கு திரும்பி உள்ளார்.அப்போது அவரை பின் தொடர்ந்த 24 வயது வாலிபர் ஒருவர் அந்த பெண் லிப்ட்டில் பயணம் செய்யும் போது அந்த பெண்ணை கற்பழிக்க முயன்று உள்ளார். அந்த பெண் தனது முழு பலத்தையும் திரட்டி வாலிபரின் பிடியில் இருந்து தப்ப முயன்றுள்ளார்.

ஆனால், வாலிபரின் பலத்தை எதிர்க்கொள்ள முடியாத பெண் ‘இனி தனது பலத்தால் அவனிடமிருந்து தப்பிக்க முடியாது’ என நினைத்து அவனது விருப்பத்திற்கு இணங்குவது போல் நாடகமாடியுள்ளார்.

உற்சாகமடைந்த வாலிபர் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதுடன் முத்தம் கொடுத்துள்ளார். இது தான் தப்பிக்க சரியான தருணம் என தீர்மானித்த பெண், தனது பல முழுவதையும் திரட்டி வாலிபரின் நாக்கை பற்களால் பலமாக கடித்து இரண்டாக துண்டாக்கியுள்ளார்.

வலியால் துடித்த வாலிபர் லிப்ட் நின்றதும் ரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்து தப்பி விட்டார்

இந்த சம்பவம் குறித்து புகார் பெற்று போலீசார் லிப்ட்டில் சோதனை செய்தபோது, அங்கு வாலிபரின் துண்டிக்கப்பட்ட பாதி நாக்கு இருந்ததை கண்டு அதனை எடுத்து மருத்துவ ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், பாதி நாக்குடன் தப்பியுள்ள நபர் நிச்சயமாக அருகில் மருத்துவமனையில்ச் இக்கிஅசி பெறும் போதுபோலீசார் கைது செய்தனர். அவர் மீது போலீசார் கற்ப்ழிப்பு முயற்சி வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
Jane Doe

Paul Jacobsen

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt labored et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

Share This Post